பட்டுக்கோட்டை: வாலிபர் மர்ம மரணம்..2 பேர் கைது

பட்டுக்கோட்டை அருகே, பனிகொண்டான் விடுதி கிராமத்தைச் சேர்ந்த அபிமன்யு (25) கல்லணை கால்வாய் ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது மனைவி பிரியங்கா, கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அபிமன்யுவின் நண்பர்களான ராஜசேகர் (34) மற்றும் ரஞ்சித் (27) கைது செய்யப்பட்டனர். மூவரும் ஆற்றுப்பாலத்தில் மது அருந்திக் கொண்டிருந்தபோது அபிமன்யு தவறி ஆற்றில் விழுந்ததாகவும், தங்களுக்கு நீச்சல் தெரியாததால் பயந்து தலைமறைவாகிவிட்டதாகவும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி