தஞ்சை: அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த எம்.பி. எம்எல்ஏ

தஞ்சை நாடாளுமன்ற தொகுதி, தஞ்சை ஊராட்சி ஒன்றியம் சக்கரசாமந்தம் ஊராட்சியில் ரூ. 14.31 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்எல்ஏ, தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச. முரசொலி ஆகியோர் திறந்து வைத்தனர். 

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் து. செல்வம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, ஒன்றியக் குழு தலைவர் வைஜெயந்திமாலா கேசவன், ஒன்றிய குழு துணை தலைவர் அருளானந்தசாமி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள், பொதுமக்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி