தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து தஞ்சாவூர் சத்யா விளையாட்டு மைதானத்துக்கு தடகள போட்டியில் பங்கேற்க வந்த மாணவன் ஜீவன், கடந்த 4-ம் தேதி மாயமானார். நேற்று (6. 2. 2026) தஞ்சாவூர் கீழவாசல் பகுதியிலிருந்து அவர் பத்திரமாக மீட்கப்பட்டு, தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். பின்னர், விளையாட்டு சங்க நிர்வாகிகள் மற்றும் ஜீவனின் சகோதரரிடம் மாணவன் ஒப்படைக்கப்பட்டார்.