இந்த வகையான புகையான் பூச்சிகள் பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் நெல் பயிரின் தண்டுப் பகுதியின் அடியில் நீர்ப்பகுதிக்கு சற்று மேலே இருந்து கொண்டு தண்டின் சாற்றை உறிஞ்சி எடுக்கும். இதனால், தண்டுப் பகுதி செயலிழந்து மடிந்து பயிர்கள் சாய்கின்றன. வயலில் உள்ள நீரை சுத்தமாக வடித்துவிட்டு வேர்களில் நன்கு படும்படி கீழ்காணும் மருந்துகளில் ஏதேனும் ஒன்றை கைத்தெளிப்பான் கொண்டு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 5 சதவீத வேப்பங்கொட்டை கரைசல், அல்லது இமிடா குளோப்ரிட் 50 மி.லி, அல்லது குளோரிப்பைரிபாஸ் 500 மி.லி அல்லது ஏக்கருக்கு 10 கிலோ கார்பரில் 10 சதவீத தூளைப் பயிரின் அடிப்பகுதியில் படும்படி தூவ வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
சிவிஓ பணி நியமனம்: மத்திய அரசு புதிய அறிவிப்பு