பட்டுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்

பட் டுக்கோட்டை தாலுக்கா அலுவலகம் எதிரே உள்ள வட்டார சேவை மையக் கட்டிடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் மற்றும் அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது. தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவின் பேரில் நடந்த முகாமிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அருள் பிரகாசம் தலைமை வகித்தார். முகாமில் எலும்பு முறிவு மருத்துவர் நவீன், மன நல மருத்துவர் மங்கையர்க்கரசி, காது, மூக்கு, தொண்டை மருத்துவர் கலைவாணி, கண் மருத்துவர் வனசங்கரி ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளை பரிசோதனை செய்து மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு பரிந்துரை செய்தனர். முகாமில் தமிழக அரசின் தேசிய அடையாள அட்டை 41 நபர்களுக்கு வழங்கப்பட்டது. மத்திய அரசின் தனித்துவ அடையாள அட்டைக்காக 48 நபர்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது.
முகாமில் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்க மற்றும் டிசம்பர் 3 இயக்க
மாவட்ட பொருளாளர் சுதாகர், பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர் அஷ்ரப், ஒன்றிய பொருளாளர் பிரபாகரன், ஒன்றிய துணைத் தலைவர் நல்லதம்பி உள்பட பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி வட்டங்களை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அருள்பிரகாசம் மற்றும் டாக்டர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கினர்.

தொடர்புடைய செய்தி