மதுக்கூர்: வேளாண் வளர்ச்சி திட்ட கருத்தரங்கம்

தஞ்சை மாவட்ட வேளாண் துணை இயக்குனர் மாலதி தலைமையில் கிசான் போஸ்ட் விவசாயிகள் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி அண்டமி கிராமத்தில் நடந்தது. தேசிய வேளாண் வளர்ச்சி திட் டம். விதை கிராம திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட திட்டத்தில் வழங்கப்படும் மாளி யங்கள் அதற்கான தகுதிகள் பற்றி விளக்கமாக கூறினர். முன்னோடி விவசாயிகள் சுமதி, பாஸ்கர், வெங்கடா சலம், இளஞ்செழியன், தங்கராசு, சக்திவேல் ஆகியோர் இயற்கை விவசாயத்தில் உள்ள இடர்பாடுகள் பற்றி கலந்துரையாடினர்.

 விதை சான்று அலுவலர் சங்கீதா விதைகளின் முக்கியத்துவம், கால்நடை மருத்துவர் சங்கர் ஆடு மாடுகளுக்கு தடுப்பூசி பற்றியும், தோட் டக்கலை அலுவலர் சரவணன் நுண்ணீர் பாசனம் பற்றியும், குறைவான நீரில் அதிக லாபம் பெறுவது பற்றியும், மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் தில் கவதி குருவை தொகுப்பு பற்றி விவசாயிகள் சமர்ப் பிக்க வேண்டிய ஆவணங்கள் குறித்து தெரிவித்தனர். மாவட்ட வேளாண் துணை இயக்குனர் மாலதி 50 விவசாயிகளுக்கு நோய் எதிர்ப்பு உயிர் மருந்தை மானியத்தில் வழங்கினார். வேளாண் உதவி இயக்கு னர் திலகவதி நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி