பட்டுக்கோட்டை அருகே சிவசக்தி காளியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சேண்டாகோட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ சிவசக்தி காளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. நான்கு கால யாகசாலை பூஜைகளைத் தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். இத்திருவிழாவில் சேண்டாகோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர்.

தொடர்புடைய செய்தி