பட்டுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட மன்னை நகர் பகுதியில் வசிக்கும் 29 பேருக்கு தமிழக அரசின் இலவச வீட்டு மனைப் பட்டாக்களை நேற்று எம்.பி முரசொலி வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், எம்எல்ஏ அண்ணாதுரை, நகராட்சி தலைவர் சண்முகப்பிரியா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் தர்மேந்திரா வரவேற்றார். திமுக நிர்வாகிகள், நகராட்சி உறுப்பினர்கள், வருவாய்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். நகராட்சி உறுப்பினர் முத்துச்சாமி நன்றி கூறினார்.