பட்டுக்கோட்டையில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவுக்கான புதிய கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த புதிய கட்டிடத்தில் தமிழக அரசு ரூ. 2 கோடி மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்களையும் வழங்கியுள்ளது. இந்நிகழ்வில் எம்எல்ஏ அண்ணாதுரை குத்துவிளக்கேற்றி வைத்தார். மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.