தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் கலந்துகொண்டு 92 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்தினார். திறனறித்தேர்வு மற்றும் கல்வியில் தனித்திறன் பெற்ற மாணவர்களுக்கும் சால்வை அணிவித்து பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் (பொ) காமாட்சி சுந்தரம் தலைமை வகித்தார்.