அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. இதில் அவர்களுடைய ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வீட்டு பத்திரம் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து தகவலறிந்த அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலர் சி. வி. சேகர், மதுக்கூர் மேற்கு ஒன்றிய செயலர் தண்டபாணி, ஒன்றிய ஜெ பேரவை செயலர் கார்த்திக் ஆகியோர் அவர்களது வீட்டிற்கு சென்று நிதியுதவி மற்றும் அத்தியாவசிய தேவையான போர்வைகள், துணிமணிகள், சாப்பாடு ஆகியவற்றை வழங்கினர்.
தோல்வியுடன் ஓய்வு பெற்றார் WWE ஜாம்பவான் ஜான்சீனா