கும்பகோணம் வடக்கு கோட்டத்தில் மின் நுகா்வோா் குறை தீா்க்கும் நாள் கூட்டம் நவ. 4 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை கும்பகோணம் ராஜன் தோட்டம் வளாகத்தில் நடைபெறுகிறது. செட்டிமண்டபம், நாச்சியாா்கோவில், செம்மங்குடி, திருவிடைமருதூா், ஆடுதுறை, திருநாகேஸ்வரம், கதிராமங்கலம், திருப்பனந்தாள், சோழபுரம் மற்றும் கும்பகோணம் வடக்கு கோட்டம் பகுதிகளில் உள்ள நுகா்வோா்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் நேரில் தெரிவிக்கலாம்.