பட்டுக்கோட்டையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

பட்டுக்கோட்டையில் மது அருந்துதல், மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுதல் மற்றும் போதைப்பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. இதில் பட்டுக்கோட்டை கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தின் 120 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 

பட்டுக்கோட்டை காந்தி பூங்கா காந்திசிலையில் இருந்து தொடங்கிய ஊர்வலம், மீண்டும் காந்தி பூங்காவை அடைந்தது. இதற்கு பட்டுக்கோட்டை கோட்ட கலால் வட்டாட்சியர் தெய்வானை தலைமை வகித்தார். 

ஊர்வலத்தில் பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் பாஸ்கரன், நகராட்சி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி