தஞ்சையில் திராவிட கழக இளைஞரணி மாநில மாநாடு

திராவிட கழக இளைஞரணி மற்றும் திராவிட மாணவர் கழகத்தின் மாநில மாநாடு வருகிற 21 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தஞ்சாவூர் பெரிய கோயில் அருகே உள்ள திலகர் திடலில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்குகிறார். மாநாட்டிற்கான பந்தல் அமைக்கும் பணிகளை திராவிட கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த மாநாடு தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, திருவையாறு ஆகிய பகுதிகளைச் சார்ந்த தொண்டர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி