பட்டுக்கோட்டை அருகே கரம்பயத்தில் நடைபெற்ற பாஜக விவசாய அணி ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று விவசாயிகளிடம் கருத்துகளைக் கேட்டறிந்தார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையில் டெல்டா விவசாயிகளின் கோரிக்கைகளைச் சேர்க்க இக்கூட்டம் நடத்தப்பட்டது. செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, "பிரதமர் மோடி உலக நாடுகளுடன் வளர்ச்சி ஒப்பந்தங்களைச் செய்கிறார்; ஆனால் தமிழக ஆளும் அரசு, பாஜகவை விமர்சிப்பதிலேயே குறியாக உள்ளது" என்றார். மேலும், தமிழக அரசின் பட்ஜெட்டில் விவசாயிகளுக்குப் பலனில்லை என்றும், அது துண்டு பட்ஜெட் என்றும் அவர் விமர்சித்தார்.