மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தஞ்சாவூரில் வியாழக்கிழமை மாலை தலைமை அஞ்சலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக மத்திய மாவட்டச் செயலா் துரை. சந்திரசேகரன் எம். எல். ஏ. தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா் டி. கே. ஜி. நீலமேகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவையாறு உள்ளிட்ட சுமார் 40 இடங்களில் இதேபோன்ற ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.