தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம், தமிழக அரசு அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டத்தை வரவேற்று, அதிலுள்ள குறைகளை சரி செய்ய வேண்டும் என்றும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7,850 சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்களுக்கு வழங்க வேண்டும் என்றும், சுகாதார காப்பீட்டு திட்ட குறைபாடுகளை சரி செய்து, காசு இல்லாத மருத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 27-ஆம் தேதி அனைத்து வட்டத் தலைமையிடங்களிலும், பிப்ரவரி 10-ஆம் தேதி மாவட்டத் தலைமையிடங்களிலும் பெருந்திரள் ஆா்ப்பாட்டம் நடத்தவும், மாா்ச் மாதம் மண்டல அளவிலான கருத்தரங்கம் நடத்தவும் சங்கம் முடிவு செய்துள்ளது. இச்சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்றது.