பட்டுக்கோட்டை சாலை விபத்தில் நீதிமன்ற ஊழியர் பலி

பட்டுக்கோட்டை அருகே செட்டியக்காடு பள்ளிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி (34), பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார். இரு தினங்களுக்கு முன் பணி முடிந்து வீடு திரும்பும்போது, கரிக்காடு பயணியர் மாளிகை அருகே சாலையில் இருந்த சென்டர் மீடியனில் மோதி படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு சுகன்யா என்ற மனைவியும் உள்ளார். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி