தென்னை ஆராய்ச்சி நிலையம், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில், தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை சார்பாக, விவசாயிகளுக்கு மழைநீர் சேகரிப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் அருண்குமார்  தலைமை வகித்தார். இதில்  வேளாண்மை பொறியியல் துறை, பட்டுக்கோட்டை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் (வே. பொ) ஆ. செங்கோல், தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் இணை பேராசிரியர் செந்தில்குமார், வேளாண்மை பொறியியல் துறை, பட்டுக்கோட்டை உபகோட்ட உதவி பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு, மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம், அதன் பயன்பாடு குறித்தும், வேளாண் பொறியியல் துறையில் உள்ள அரசு திட்டங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.

நிகழ்ச்சியில், மழைநீர் சேகரிப்பு, பண்ணைக்குட்டை மேலாண்மை போன்ற தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கப்படங்கள் மூலம் விவசாயிகள் அனைவருக்கும் பயனடையும் வகையில் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள், வேளான் தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் பணியாளர்கள் மற்றும் வேளாண்மை பொறியியல் துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி