பட்டுக்கோட்டை வட்டாரத்தில் இன்று 'மக்களுடன் முதல்வர்' முகாம்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டாரத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் இன்று வியாழக்கிழமை (ஜூன் 5) நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: பட்டுக்கோட்டை வட்டாரத்தில் நடுவிக்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட நாடியம்மன் கோயில் மண்டபம், நம்பி வயல் ஊராட்சிக்குள்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஏரிப்புறக்கரை ஊராட்சிக்குள்பட்ட ரெட் கிராஸ் சமுதாயக் கூடம் ஆகிய 3 இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. 

இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கைகளை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம். இம்முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களும் தொடர்புடைய துறைகளால் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் 30 நாள்களில் மக்களுக்கு வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி