தஞ்சை: மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலமைசர் திடீர் ஆய்வு

கல்லணையிலிருந்து தஞ்சாவூருக்கு வந்து கொண்டிருந்த தமிழக முதல்வர், திடீரென தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் சென்றார். அவசர சிகிச்சைப் பிரிவுக்கு சென்ற தமிழக முதல்வர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், மருத்துவக் கல்லூரி சாலை பாலாஜி நகரில் வசிக்கும் திமுக மூத்த நிர்வாகியும், உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினருமான முன்னாள் மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினருமான எல். கணேசன் வீட்டுக்கு சென்று, அவரிடம் நலம் விசாரித்தார்.

தொடர்புடைய செய்தி