வன உயிரின பாதுகாப்பு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள்

தஞ்சாவூரில் வன உயிரின பாதுகாப்பு பயிற்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் நேற்று சான்றிதழ்களை வழங்கினார். வனக் கோட்டம் சார்பில் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியின் அடிப்படையில், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, கற்றல் திறனின் அடிப்படையில் 50 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம், மாவட்ட வன அலுவலர் க. கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி