பேராவூரணியில் புத்தக வெளியீட்டு விழா

பேராவூரணியில் தமிழக மக்கள் புரட்சிக் கழக மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ஆறு. நீலகண்டன் எழுதிய 'வேளாண்மை ஒரு வாழ்வியல்' மற்றும் 'கடவுள்' ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா மாநிலத் தலைவர் அரங்க. குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. புனிதா கணேசன் மற்றும் கலைச்செல்வி ஆகியோர் நூல்களை வெளியிட, எம். எல். ஏ அசோக்குமார் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி