அதிராம்பட்டினம்: தீ விபத்து; குடிசை வீடுகள் சாம்பல்

அதிராம்பட்டினம் அருகே நடுவிக்காடு பள்ளிக்கூடம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையன். அதே பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா ஆகியோர் வீடுகள் அருகருகே அமைந்துள்ளன. 

இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 5) மாலை இருவரது வீட்டிலும் ஆளில்லாத நிலையில் இருவரது வீடும் தீப்பற்றி எரிவதை அருகில் இருந்தவர்கள் பார்த்து விட்டு உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த சம்பவ இடத்துக்கு வந்த பட்டுக்கோட்டை தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர். 

தீப்பற்றியதற்கான காரணம் என்ன என்பது தெரியாத நிலையில் அதிராம்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீவிபத்தில் கருப்பையனின் வீடு மற்றும் பைக் சேதமானது. அதேபோல் மல்லிகாவின் வீடு மற்றும் வீட்டில் இருந்த பீரோ, கட்டில் உட்பட அனைத்து பொருட்களும் சேதமானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி