தஞ்சை: ஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க ஏற்பாடு

பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் ரகுராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, ஓய்வூதியதாரர்கள் இனி வீட்டிலிருந்தபடியே தபால்காரர்கள் மூலம் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். இந்தியா போஸ்ட் பெமென்ட் வங்கி மூலம் பயோமெட்ரிக் அல்லது பேஸ் ஆர். டி. ஆப் பயன்படுத்தி இந்த சேவையை பெறலாம். இதற்கான சேவை கட்டணம் ரூ. 70 ஆகும். இந்த சேவையை பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள அஞ்சலகத்தை அல்லது தபால்காரரை தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி