சதீஷ் தற்போது ஐரோப்பா நாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் இன்று காலை தனது முன்னாள் மனைவி மீனாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த மீனாவின் சகோதரர்கள் வீரக்குமார் மற்றும் சிவா இருவரும் சதீஷின் வீட்டிற்கு சென்று அவரது வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் வீட்டின் நிலை மற்றும் மரப்பெட்டி ஆகியவை சேதமடைந்தன. அந்த வீட்டில் சதீஷின் தந்தை ஜெகநாதன் மட்டுமே வசித்து வரும் நிலையில் பக்கத்து வீட்டில் இருந்த சதீஷின் சித்தி மல்லிகா தீப்பற்றி எரிவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் இது தொடர்பாக சதீஷ்க்கு போன் செய்து வீட்டிற்கு தீ வைத்த தகவலை கூறியுள்ளார்.
இதனை அடுத்து சதீஷ் ஆன்லைன் மூலம் பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். சதீஷ் கொடுத்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.