நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கும் அரசு மருத்துவமனை செவிலியர்

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் கண்காணிப்பாளர் நோயாளிகளிடம் பணம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியர் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருபவர் ஷீலா. இவர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நீண்ட வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரு தினங்களாக இவர் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடம் கையூட்டு பெரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தஞ்சையில் நடந்த சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் ஷீலாவுக்கு சிறந்த செவிலியருக்கான விருதை மாவட்ட ஆட்சியர் வழங்கிய நிலையில் ஷீலா அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடம் லஞ்சம் பெறும் வீடியோ வைரல் ஆகி வருவது பொதுமக்களிடம் பேசும் பொருளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி