தஞ்சை மாவட்ட ஆட் சியர் பிரியங்கா பங்கஜம் வழிகாட்டுதலின்படி அறிவுறுத்தப்பட்ட தினங்களில் நடைபெற்ற ஜமாபந்தியில் பட்டுக்கோட்டை ஜமாபந்தி அலுவலராக பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் சங்கர் கலந்து கொண்டு கிராம கணக்குகளை ஆய்வு செய்தார்.
10நாட்கள் நடந்த ஜமாபந்தியில் பட்டுக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த பொது மக்களிடமிருந்து 627 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 43 மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு 43 நபர்களுக்கு பட்டா மாறுதல் ஆணைகள் வழங் கப்பட்டது. மீதி உள்ள 584 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.
நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை தாசில்தார் தர்மேந்திரா, சமூக பாதுகாப்பு
திட்ட தனி வட்டாட்சியர் பாஸ்கரன், வட்ட வழங்கல் அலுவலர் தர்மராஜ், கோட்ட கலால் அலுவலர் தெய்வானை, தனி வட்டாட்சியர் (நகர நிலவரித் திட்டம்) அருணகிரி, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஷேக்உமர்ஷா, மண்டல துணை வட்டாட்சியர்கள் சுரேஷ், கண்ணகி, வட்ட துணை ஆய்வாளர் ரஞ்சித்குமார் மற்றும் அனைத்து சரகவருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், இதர துறை அலுவலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.