தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாகன சோதனையின்போது, செம்பரான் குளம் பகுதியில் காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 500 கிலோ போதைப் பொருள்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டன. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரா பெனிவால் (19) மற்றும் நரனாராம் (23) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு, போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.