தூத்துக்குடியிலிருந்து தஞ்சாவூருக்கு 1,300 டன் உர மூட்டைகள் சரக்கு ரயில் மூலம் வியாழக்கிழமை வந்தது. மேட்டூர் அணை வியாழக்கிழமை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கான ஆயத்தப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளன. இதையொட்டி தூத்துக்குடியிலிருந்து சரக்கு ரயில் மூலம் 1,300 டன் யூரியா, கம்போஸ்ட், டிஏபி உரங்கள் தஞ்சாவூருக்கு வியாழக்கிழமை வந்தன. பின்னர், இந்த உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு, தனியார் விற்பனை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.