தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே பெண் ஒருவர் அண்மையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பாபநாசம் அருகே கபிஸ்தலம் காவல் நிலையம், வன்னியடி கிராமம், குடியானத் தெருவைச் சேர்ந்தவர் அழகர் மனைவி சுசிலா (42). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மனநிலை பாதிக்கப்பட்ட இவர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது புதன்கிழமை அதிகாலை தெரியவந்தது. புகாரின்பேரில் கபிஸ்தலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.