கபிஸ்தலம் அருகே தேவன்குடி மீனவர் காலனியைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி இளங்கோவன் (50), கணபதி அக்ரஹாரத்தில் ராஜேஷ் மற்றும் முத்துக்குமார் ஆகியோருடன் மது அருந்தியுள்ளார். மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், ராஜேஷ் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் இளங்கோவனைத் தாக்கியதில் அவர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து புகாரளித்த நிலையில், போலீஸார் ராஜேஷ் மற்றும் முத்துக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.