அந்த சமயம் பசுபதி கோவில் சிவன் கோயிலில் இருந்து திருஞானசம்பந்தர் திருமேனி கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக சென்றது. திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற சைவ திருத்தலங்களில் ஒன்றான திருப்புள்ளமங்கை அல்லியங்கோதை ஆலந்துறைநாதர் ஆலயத்தின் முன்பு கண்ணாடி பல்லக்கு சுவாமி வந்தடைந்தது.
விழாவில் பசுபதி கோவில் கிராம பொதுமக்கள் அனைத்து சிவனடியார்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசித்து வழிபட்டனர்.