கஷ்டமான சூழ்நிலையில் பிரேமா கூலி வேலைக்குச் சென்று நான்கு குழந்தைகளையும் படிக்க வைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையினால் இவரது தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அப்போது சாப்பிட்டுக் கொண்டிருந்த பிரேமா மற்றும் அவரது மகன் மதன்குமார் ஆகிய இருவரும் பலத்த படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
தற்போது ஏழ்மையின் பிடியில் இருந்து வரும் பிரேமா மழையினால் இடிந்த தொகுப்பு வீட்டினை புதிதாக கட்டி கொடுத்து வாழ்வாதாரத்துக்கு உதவிட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.