கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக தலைமையில் பலமான கூட்டணி அமைந்து வரும் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்தார். திமுக ஆட்சியை 'போதை மாடல்' ஆட்சியாகக் குறிப்பிட்ட அவர், அரசு ஊழியர்கள், விவசாயிகள், ஆசிரியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தால் திமுகவுக்குத்தான் பாதிப்பு ஏற்படும் என்று அவர் கூறினார்.