தஞ்சை: சாலை விபத்தில்.. வாலிபர் பரிதாப பலி

தஞ்சாவூா் மாவட்டம், உடையாளூா் மண்டகமேட்டைச் சோ்ந்தவா் விவசாயி பாலசுப்பிரமணி. இவரது மகன் சூா்யா( 22). இவா் இவரது நண்பா் மணக்குடியைச் சோ்ந்த தவமணி மகன் தேவேந்திர வாலி (32). இருவரும் தஞ்சாவூா்-விக்கரவாண்டி புறவழிச்சாலையில் சனிக்கிழமை மாலை மோட்டாா் சைக்களில் சென்றனா். அப்போது எதிரே வந்த காா் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே சூா்யா உயிரிழந்தாா். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி