தஞ்சாவூர்: தேவாரம், திருவாசகம் படிக்க சிறப்பு பயிற்சி வகுப்பு

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடை ஊராட்சி கோயில்தேவராயன்பேட்டை மச்சபுரீஸ்வரர் ஆலய வளாகத்தில் கோயில் தேவராயன்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்கள் சைவ சமயத்தைப் பற்றி நன்கு புரிந்துகொள்வதற்காகவும், தேவாரம் திருவாசகம் பயில்வதற்கும் கிராமவாசி சிவனடியார் சிவ. எஸ். சந்திரசேகர் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலையில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 

இப்பயிற்சியில் இக்கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டு பயின்று வருகின்றனர். முன்னதாக இப்பயிற்சிக்கு வரும் மாணவர்களுக்கு சிவனடியார் செந்தலை கண்ணன் அவர்கள் மூலம் ருத்ராட்சம் அணிவிக்கப்படுகிறது. 

அதனைத் தொடர்ந்து அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பிற்கு இப்பகுதியில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆர்வமுடன் அனுப்பிவைக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி