பாபநாசம் தாலுக்கா அம்மாபேட்டை ஒன்றியத்தில் 25 ஆண்டுகளாக சாலை வசதியின்றி தவித்த ஹாஜியார் நகர் மக்களுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலை சீரமைக்கப்பட்டது. தமிழக வெற்றி கழகத்தின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் நிஜாம் அலி, பாபநாசம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் அசாருதீன் உதுமான் அலி மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் இந்த சீரமைப்பு பணி நடைபெற்றது. சாலை வசதி ஏற்படுத்தி தந்தமைக்கு அப்பகுதி மக்கள் கழக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.