அனைத்து கிராமங்களிலும் கொள்முதல் நிலையங்களை திறக்க கோரிக்கை

காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ஏ கே ஆர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணி முழு வீச்சில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், பல இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. எனவே அவற்றை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஏக்கருக்கு 40 கிலோ எடையில் 80 மூட்டைகள் விளையும் நெல்லை, சிட்டா, அடங்கல், கிராம நிர்வாக அலுவலர் சான்று கொடுத்தால் கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்களில் பழுதடைந்த நெல் தூற்றும் இயந்திரம், எடைபோடும் மின்னணுத்தராசு, ஈரப்பதம் பார்க்கும் கருவி ஆகியவற்றை பழுது நீக்கி அல்லது புதிதாக மாற்றி தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி