அம்மாப்பேட்டை ஒன்றியத்தில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுக்கு வரிகள் செலுத்தி வாழ்ந்து வரும் கூலித் தொழிலாளர்களின் இடத்தை வகை மாற்றம் செய்து இலவச குடிமனைப் பட்டா வழங்கக் கோரி பாபநாசம் தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் பக்கிரிசாமி தலைமையில் நடைபெற்றது. கும்பகோணம் சார் ஆட்சியர் நடவடிக்கையில் உள்ளதாகவும், விரைவில் வீட்டு மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.