இந்த நிலையில் நிலத்தின் உரிமையாளர் அந்த நிலத்தை இன்னொருவருக்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து விவசாய நிலத்தை மீண்டும் எனக்கே தர வேண்டும் எனக் கூறி அய்யம்பேட்டை சாவடி தெருவில் அமைந்துள்ள பிஎஸ்என்எல் டவர் மீது ஏறி தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். தகவல் அறிந்து தீயணைப்பு மற்றும் அய்யம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் லட்சுமணனணிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேச்சுவார்த்தையில் நிலத்தை குத்தகைக்கு விட்டு 13-லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்ற உரிமையாளர் நேரில் வந்தால் மட்டுமே டவரை விட்டு கீழே இறங்குவேன் என்று கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் இந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.