இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக இந்த நீர் தேக்கதொட்டிக்கான மின் மோட்டாரில் பழுது ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி சூலமங்கலம் ஊராட்சி அலுவலக முன்பு கிராம மக்கள் குடங்களை கைகளில் சுமந்தவாறு, மின் மோட்டார்க்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) விஜயலெட்சுமி மற்றும் அய்யம்பேட்டை போலீசார் விரைந்து வந்து கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மின் மோட்டார் உடனடியாக சீரமைத்து சீரான குடிநீர் வினியோகம் தரப்படும் என உறுதியளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.