தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைக்கு பேரா ஜவாஹிருல்லா பாராட்டு

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் 2026-27ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை, ஒன்றிய அரசின் அலட்சியப்போக்கிற்கு எதிரான சான்றாக அமைந்துள்ளது. வரி வருவாயில் தமிழகம் முன்னணியில் இருந்தும், மெட்ரோ ரயில் திட்டங்கள், பேரிடர் நிவாரணம், கல்வி-சுகாதார நிதி ஒதுக்கீட்டில் மத்திய பாஜக அரசு பாரபட்சம் காட்டுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இத்தகைய நிதி நெருக்கடியிலும், மாநிலத்தின் சொந்த வளங்களைக் கொண்டு பெண்கள், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் நலன் காக்கும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி