தமீம் அன்சாரி, இசை. சிபி சதாசிவம், ஒளிப்பதிவு. படத்தொகுப்பு, இயக்குநர் சபரிஷ். கதை, இதய நிலவன். தனது முதல் படத்தில் கால் சென்டரில் நடக்கும் நிகழ்வுகளை வைத்து படமாக்கிய இயக்குநர் சபரிஷ், அதற்கு முற்றிலும் மாறாக இந்த 'பரமன்' படத்தில் விவசாயிகளின் வாழ்வியல் சார்ந்த பிரச்சினைகளை கையிலெடுத்துள்ளார். இப்படம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சக்தி சினிமாஸ் திரையரங்கில் வெளியானது. படம் பார்த்த பொதுமக்கள் கூறுகையில் 'விவசாயத்தை மையப்படுத்தி வெளியாகியுள்ள படம் என்பதால் ஒரு சிறு விவசாயி தனது நிலத்தை மீட்க படும் சிரமங்களை உத்தரூபமாக வெளிப்படுத்தியுள்ளார். மேலும் நிலத்தை மீட்க முடியாமல் படத்தின் முடிவில் அனைத்தையும் இழந்து விவசாயி இறப்பது காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க படம் பரமன்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது