பாபநாசம் வட்டம் அம்மாப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிமாலை ஊராட்சியில் ரூ. 42 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலக கட்டிட கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை ஒன்றியக்குழு தலைவர் கே. வி. கலைச்செல்வன், ஒன்றிய ஆணையர் ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சிகள் நவரோஜா, ஒன்றிய பொறியாளர் கதிரேசன், பணி மேற்பார்வையாளர் அமிர்தவள்ளி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது ஊராட்சி மன்ற தலைவர் அங்கையர்க்கண்ணி, துணை தலைவர் நிர்மலா, ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.