அப்போது, அந்த வழியாக வந்த பாபநாசம் அருகே தேவராயன்பேட்டை மாமரத்து கோயில் தெருவைச் சேர்ந்த தியாகராஜனை (42) பிடித்து மேற்கொண்ட விசாரணையில், அவர் அருகிலுள்ள இடத்தில் தலா 50 கிலோ எடை கொண்ட 21 மூட்டைகளில் 1,050 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதும், பாபநாசம், பண்டாரவாடை, வங்காரம்பேட்டை, அய்யம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியைக் குறைந்த விலைக்கு வாங்கி மீன் பண்ணைகளுக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, 1,050 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளைக் காவல் துறையினர் கைப்பற்றி தியாகராஜனை கைது செய்தனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு