பாபநாசம் பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான திருக்கருகாவூர், பண்டாரவாடை, ராஜகிரி, திருப்பாலைத்துறை பகுதிகளில் காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், திடீரென இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையின் காரணமாக சாலை எங்கும் மழைநீர் ஓடியது.

முன்னெச்சரிக்கையாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளைப் பயன்படுத்திச் சென்றனர். மேலும் பாதுகாப்பு கருதி பல்வேறு இடங்களில் மின்சாரம் தடை செய்யப்பட்டது. இரவு நேரத்தில் பெய்த மழையின் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். மறுபுறம் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் உருவாகி வருவதால் மகிழ்ச்சி நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி