கும்பகோணம் அருகே பைக் விபத்தில் 2 பேர் பலி

தஞ்சை - விக்கிரவாண்டி பைபாஸ் சாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் பட்டதாரி வாலிபர் பரணிதரன் (23) மற்றும் கருப்பூர் பகுதியைச் சேர்ந்த விஜய் (24) ஆகிய இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவரும் தங்கள் இருசக்கர வாகனங்களில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது நேருக்கு நேர் மோதி தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தனர். சுவாமிமலை போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி