கும்பகோணம்: ரயிலில் தவற விட்ட தங்க நகைகள் மீட்பு

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சொக்கநாதன் புத்தூரைச் சேர்ந்த சக்தி கணபதி (33). இவர் கும்பகோணத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு நிகழ்வுக்கு வந்தார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரவு மதுரை செல்வதற்காக கும்பகோணம் ரயில் நிலையத்தில் குடும்பத்தினருடன் காத்திருந்தார். அப்போது, திருச்சி நோக்கி செல்லும் ஜனசதாப்தி ரயிலில் அவர்கள் தவறுதலாக ஏறிவிட்டனர். 

இதுகுறித்து டிக்கெட் பரிசோதகர் கூறியதையடுத்து, அவர்கள் அந்த ரயிலில் இருந்து இறங்கினர். அப்போது, அவர்கள் கொண்டு வந்த பையை தவறுதலாக அந்த ரயிலிலேயே விட்டுவிட்டது தெரியவந்தது. இதுபற்றி சக்தி கணபதி கும்பகோணம் ரயில் நிலையத்தில் பணியிலிருந்த போலீசாரிடம் பையை தவறவிட்டதாகவும், அதில் சுமார் ரூ. 3 லட்சம் மதிப்புடைய 33 கிராம் நகை இருந்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து, பாபநாசம் ரயில் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ரயில் பாபநாசம் வந்ததும் பை மீட்கப்பட்டு, சக்தி கணபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி