பாபநாசம் அருகே நகைக்கடை நடத்தி வரும் முருகப்பன் (70) என்பவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், உங்கள் வங்கி கணக்கில் இருந்து பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும், உங்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி போலியாக சிம் கார்டுகள் வாங்கி பாலியல் குற்றம் மற்றும் ஆள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் மிரட்டி ரூபாய் 93 லட்சத்தை பெற்று ஏமாற்றியுள்ளனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.